டக்ளஸை தேடிச்சென்று சந்தித்த சி.வி.கே. சிவஞானம்: எழுந்துள்ள விமர்சனத்திற்கு கண்டனம்

Batticaloa Colombo Douglas Devananda Sajith Premadasa
By Bavan Nov 06, 2025 07:45 AM GMT
Report

தமிழரசுக்கட்சியின்; சி.வி.கே. சிவஞானம் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசுக்கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக  மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

2018 தமிழரசு கட்சி ஆதரவுகோரி வழங்கிய போது நீங்கள் மதுபோதையில் இருந்ததா? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் ஈ பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டக்ளஸை தேடிச்சென்று சந்தித்த சி.வி.கே. சிவஞானம்: எழுந்துள்ள விமர்சனத்திற்கு கண்டனம் | Douglas Sivagnanam Meeting Problems Members

தமிழ் மக்கள் உயிருடன் எரித்து படுகொலை

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி கே. சிவஞானம் தேடிச்சென்று நேரில் சந்தித்தமை தொடர்பாக தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் என்பவர் எமது கட்சி செயலாளர் நாயகத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

2018 ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் போது எங்கள் கட்சியின் தமிழரசு கட்சி ஆதரவு கோரினர். அதற்கு ஆதரவு வழங்கினோம் அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் மதுபோதையில் இருந்தார? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? அப்போது அவர் என்ன நிலையில் இருந்தார் என தெரியவில்லை?

முன்னாள் மறைந்த ஜனாதிபதி பிரேமதாச 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களை உயிருடன் ரயர் போட்டு எரித்து படுகொலை செய்த ஒருவர் அவரின் மகன் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு இரா.சாணக்கியன் மேடையில் ஏறி ஆதரவு கோரினார். அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் தூக்க கலக்கத்தில் இருந்தீர்களா? இந்த விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்

அதேவேளை டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே தினத்தில் 150 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் பெற்றுக்கொடுத்திருக்கிறார் இவ்வாறு சுகாதார தொண்டர் நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

கல்லடி சிவானந்தா இசை நடன கல்லூரி கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்த அவர் வடகிழக்கு என பார்க்காமல் தன்னால் இயன்ற அத்தனை சேவைகளையும் மக்களுக்கு செய்தார்.

கொழும்பில் அவசர சந்திப்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

கொழும்பில் அவசர சந்திப்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

டக்ளஸை தேடிச்சென்று சந்தித்த சி.வி.கே. சிவஞானம்: எழுந்துள்ள விமர்சனத்திற்கு கண்டனம் | Douglas Sivagnanam Meeting Problems Members

இலங்கையின் முதல் பெண் போராளி

இவ்வாறு மட்டு மாவட்டத்தில் இருக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை எடுத்து கொண்டீர்களானால் 30 வீதமான சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கியது அவர் என்பதை மறந்து விடக்கூடாது.

டக்ளஸ் தேவானந்தா ஆயுத போராட்டத்தில் இணைத்துக்கொண்டு பலஸ்தீன பயிற்சிக்கு சென்று அங்கிருந்து திரும்பி வந்தபோது இந்த ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்தார்.

அப்போது இடம்பெற்ற சகோதர படுகொலைகளை வெறுத்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற சிந்தனையை கொண்டு தூர நோக்கோடு அவர் செயல்பட்டவர் என்பதுடன் அவரின் தங்கை தான் இலங்கையிலே முதல் முதல் பெண் போராளி. இந்த உண்மை பலருக்கு கசக்கலாம் ஆனால் இது தான் வரலாற்று நிஜம்.

டக்ளஸை தேடிச்சென்று சந்தித்த சி.வி.கே. சிவஞானம்: எழுந்துள்ள விமர்சனத்திற்கு கண்டனம் | Douglas Sivagnanam Meeting Problems Members

இன்று வடகிழக்கு பிரிந்திருக்கிறது. 75 வருட காலமாக தேசியத்தை பேசி தமிழ் மக்களுடைய உரிமைகள் அத்தனையும் அழித்து இணைந்திருந்த வட கிழக்கை பிரித்திருக்கிறார்கள்.

இன்னும் 75 ஆண்டு காலம் வழங்கப்பட்டாலும் போலி தேசியத்தை பேசி தமிழ் மக்கள் உரிமைகள் அத்தனையும் இல்லாமல் செய்து வடகிழக்கில் தமிழ் பாடசாலை ஒன்று இருக்கிறதா என தேடித்திரியும் அளவிற்கு உங்கள் அரசியலை கொண்டு செல்வார்கள்.

உங்களுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை. உங்கள் உறவினர்கள் சந்ததியினர் சொத்துடன் வாழ வேண்டும் என அரசியலே டீல் போட்டு மதுபான அனுமதிபத்திரம் எடுப்பது, கொழும்பில் சொகுசு வீடு கேட்பதும் இப்படியான டீல்களுடன் கடந்த கால ஆட்சியாளர்களுடன் நீங்கள் ஒட்டி உறவாடி இருந்தீர்கள்.

நீங்கள் நினைத்திருந்தால் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலே பிரிந்த வடகிழக்கை இணைந்திருக்க முடியும். அவைகளை சிந்திக்கவில்லை போலி தேசியம் என நரித்தோலை போர்த்திக் கொண்டு புலித்தோல் என்று சொல்லி மட்டக்களப்பு மக்களை மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய உரிமைகளையும் அழித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வாடகை வாகனங்களில் சுற்றித்திரியும் பெரும் மோசடி கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

வாடகை வாகனங்களில் சுற்றித்திரியும் பெரும் மோசடி கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் அடுத்தடுத்து சிக்கிய மூவர்

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் அடுத்தடுத்து சிக்கிய மூவர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US