டக்ளஸ் - சித்தார்த்தன் சந்திப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சங்கு - சைக்கிள் கூட்டணி தரப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கொள்கை ரீதியான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதிய கூட்டின் முக்கியஸ்தர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு இன்றையதினத்துக்கு(05) பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த சந்திப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று கூட்டாகத் தெரிவித்தனர்.
சிவஞானம் - டக்ளஸ் சந்திப்பு
யாழ். உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வில் மேற்படி இருவரும் கலந்துகொண்டபோதே இதனைக் கூறினர்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி இன்று மாலை நடைபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
