தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது - டக்ளஸ் தேவானந்தா

Ilankai Tamil Arasu Kachchi Douglas Devananda Sajith Premadasa
By Kajinthan Sep 03, 2024 08:40 AM GMT
Report

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சியினுடைய தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் கட்சி சார்ந்த விடயம்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

கடந்த கால அனுபவம்

நான் தேர்தல் திகதி ஆரம்பக்க முன்னரே ரணில் விக்ரமசிங்க தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு எனது ஆதரவை வழங்கினேன்.

மக்கள் வரிசை யுகத்தில் பட்ட துன்பத்தை இன்னும் மறக்கவில்லை. அதனை நீக்கிய தலைவர் ரணில் விக்ரமசிங்க. அதனையும் மக்கள் மறக்கவில்லை.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது - டக்ளஸ் தேவானந்தா | Douglas On Itak Decision To Support Sajith

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க போவதாக அறிவிக்க முன்னரே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார்கள்.

ஏனெனில் கடந்த கால அனுபவம் இதற்கு நல்ல உதாரணம். ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாமல் தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் தெற்கு மக்களாக இருந்தாலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவார்கள்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கும் அதிகப்படியான வாக்குகள் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

மக்களின் ஆதரவு எனக்கு பலமடையும் சந்தர்ப்பங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவாகவும் சாணக்கியமாகவும் செய்து முடிப்பேன். 

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் மக்களை பாதிக்காது - டக்ளஸ் தேவானந்தா | Douglas On Itak Decision To Support Sajith

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் நாட்டை மீண்டும் பாதாள நிலைக்கு கொண்டு செல்ல நாட்டு மக்கள் தயாரில்லை.

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவையோ அல்லது தமிழ் மக்களையோ பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

வெளிநாட்டு கடன்களை நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி கோரிக்கை

வெளிநாட்டு கடன்களை நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US