யாழில் ஜனாதிபதியின் தேசிய திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ்
முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (13) யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியால் நேற்றுமுதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த திட்டமானது 25 மாவட்டங்களிலும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலாசார நிகழ்வுகள்
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 13ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விருந்தினர்கள் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேநேரம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றுமுதல் ஜூலை 15ஆம் திகதி வரையும், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 13ஆம் திகதியும் கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள்
மேலும் முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொனராகலை, மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19 ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதமும், தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3500 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam