நிர்வாகத் திறனின்மை விமர்சனம்: கலந்தாலோசிப்போம் என டக்ளஸ் உறுதி
ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த சபைகளில் உள்ள நிர்வாகத் திறனின்மை தொடர்பாக விமர்சனங்கள் எழுவது தமக்கு தெரியும் என்றும், அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றுஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலுரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர் கட்சி
இதன்போது அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
மக்கள் தேர்தல் மூலம் பிரதேச சபையின் உறுப்பினர்களை தெரிவு செய்த பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

ஆகவே ஒரு முயற்சியாக ஆதரவு வழங்கிப் பார்ப்போம் என்று தான் வழங்கினோம். அப்படித்தான் முதலில் மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினோம்.
ஆனால் அவராலும் சரியாக செய்ய முடியவில்லை. இலங்கை தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த பின்னர் அவர்களாலும் சரியாக செயல்பட முடியவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை
ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைமைகளான சி.வி.கே சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் கதைத்து விரைவில் ஒரு முடிவுக்கு வரவிருக்கின்றோம்.
எமக்கு ஆட்சியில் பங்கெடுக்க விருப்பமில்லை. ஊர்காவற்துறையை எடுத்துப் பார்த்தால் எங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது. ஆனால் நாங்கள் பதவியை விரும்பவில்லை.
இன்றைய ஆட்சியாளர்களிடம் மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியில்லை. அதனால்தான் ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில் இருந்து கொண்டு சரியானவற்றுக்கு ஆதரவளிப்பதும் பிழையானதை எதிர்ப்பதும் என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri