மக்களின் நலனுக்காகவே நாங்கள்..! டக்ளஸ் தேவானந்தா உறுதி
மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும் தொடர்ந்தும் புத்துணர்வுடன் முன்னெடுக்கப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(21.03.2026) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் ஆதரவு தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கான ஓர் அரசியல் அமைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது என்பது எனது திடமான நம்பிக்கை. அதன்டிப்படையில், ஆயுதப் போராட்ட காலத்திலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கியிருந்தேன்.

அதாவது, பெண்களின் வகிபாகம் என்பது 50 சத வீதம் இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. அன்று வெளிநாட்டில் ஆயுதப் பயிற்சி பெற வாய்புக் கிடைத்த போது ஏறக்குறைய அரைவாசிப் பேரை பெண்களாக அனுப்பியிருந்தேன்.
அதே நிலைப்பாடு இன்றும் கட்சிச் செயற்பாடுகளில் பின்பற்றப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே பெண்களின் செயற்பாடு மேலும் வலுப்பெற நீங்கள் ஒவ்வொருவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
