மக்கள் எதிர்பார்ப்புகள் தீர்க்கப்படுவதே எமது நோக்கம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களது இன்னல்கள் நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மல்லாகம் அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று(30.03.2025) நடைபெற்ற வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான இன்றைய சூழலுக்கேற்ற பொறிமுறைகளுடன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
அபிவிருத்திக்கான தேர்தல்
இந்நிலையில், தற்போது உள்ளூர் அதிகார சபை தேர்தல் வந்துள்ளது. இது பிரதேசங்க்ளின் அபிவிருத்திக்கான ஒரு தேர்தல்.
இது மக்களின் தேவைகளை முன்னிறுத்திய ஒன்றாக இருப்பதால் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




