டக்ளஸ் மதுஷிற்கு துப்பாக்கியை வழங்கியது ஏன்! எழுந்துள்ள சந்தேகம்..
பாதாள உலக குழுவை வழிநடத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(27) ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
போதைபொருள் கடத்தல்காரராக இருந்த மாகந்தற மதுஸினுடைய கைத்துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவினுடையது என் அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது பல்வேறுப்பட்ட கேள்விகளை எழுப்புகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் என்று நாடாளுமன்றில் ஒருமுறை டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக போரிட்ட இலங்கை படையினரே போர் முடிந்த பின்னர் பல புகைப்படங்களையும், ஆவணங்களையும் பரிசீலித்து போதைபொருள் மற்றும் மது தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.
அந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய தவறை மறைப்பதற்காக இவ்வாறாதொரு பழியை சுமத்தியிருந்தார் என குறிப்பிட்டார்.