ரணில் விக்ரமசிங்க ஒரு செயல் வீரர்: முதல் பிரசார கூட்டத்தில் டக்ளஸ் நம்பிக்கை
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (17.08.2024) இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மீண்டும் ஒரு சந்தர்ப்பம்
இவரது வெற்றியே கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க மக்களுக்கும் நாட்டுக்கும் வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
இதேநேரம், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி ரணில் தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயற்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றார்.
அதனால் அவருக்கு நாங்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று விருப்புகின்றேன்.
அந்த வகையில், எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி
தேர்தலில் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும்
அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது நாடும் மக்களும்
எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளியில் வரலாம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |