நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக டக்ளஸ்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்ற மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் குறித்த திருவிழா நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் இறுதி நிகழ்வான இன்று (10.08.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவுள்ளார்.
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்
நெடுவூர்த் திருவிழா
இதன்போது, நிகழ்வை பார்வையிட்டதுடன் அதன் நோக்கம் மற்றும் எட்டப்பட்ட அடைவு தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்தார்.

முன்பதாக நெடுவூர்த் திருவிழா நிகழ்வானது நெடுந்தீவில் இம்மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இன்று 10ஆம் திகதிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 30 நிமிடங்கள் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam