முல்லைத்தீவு இறால் இத்தனை ஆயிரங்களா! (Photos)
கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த நேற்றைய தினம்(29.12.2022) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் பியல் நிஸாந்த, உத்தியோகபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இறால் வளர்ப்பு
இதேவேளை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் யாழில் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய அராலி பாலம் அமைந்துள்ள பகுதிக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர்,அராலிப் பாலத்தினை அண்டிய நீரேரிப் பகுதியைப் பார்வையிட்டதுடன் பிரதேச கடற்தொழில் சங்கங்களை ஒருங்கிணைத்து குறித்த பகுதியில் இறால் வளர்ப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.








