அன்றிருந்த இயக்கங்களே எமது மக்களின் அழிவுக்கு காரணம்!..அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு
அன்றிருந்த இயக்கங்களும் தமிழ் அரசியல் தரப்பினருமே எமது மக்களை இடம்பெயர்வுகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி வடக்கு சனசமூக நிலையம் மற்றும் கதிரொளி அறிவகம் இணைந்து புதுவருட தினத்தை முன்னிட்டு நடத்திய விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் சரியான ஒரு அரசியல் அத்திவாரத்தை அல்லது சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றம் வரும்போதுதான் தீர்வுகளை இலகுவாக காணமுடியும்.
அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு
எமது அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வுகளை அடைய எது சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்பதை நான் கடந்த 30 ஆண்டுகளாக கூறிவருகின்றேன்.
ஆனால், அன்றிருந்த இயக்கங்களோ தமிழ் அரசியல் தரப்பினரோ எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது மக்களை உசுப்பேற்றும் அரசியல் கருத்துக்களை முன்வைத்து எமது மக்களை இடம்பெயர்வுகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.
ஆனாலும் தற்போது அத்தகைய அரசியல் தரப்பினர் நான் 30 வருடத்துக்கு முன் கூறியதை முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |