ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினாராம் மாவை!
"நடந்து முடிந்த யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார்."
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri