தேசிய மக்கள் சக்தியின் நகர்வுகள்: விளக்கம் கோரும் நாமல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் பொருளாதார கொள்கையை, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து செல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்ன என்பதை சபையில் தெளிவுபடுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று(04.12.2024) நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொள்கை பிரகடன உரை
''ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை என்பது தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தான். ஆனால் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றதா?
ஜனாதிபதி கொள்ளை பிரகடன உரையில் வரியை குறைக்கவேண்டும். வருமானத்தை அதிகரிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ரணில் முன்னெடுத்த அதே ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த ஜ.எம்.எப் உடன் இணங்கியுள்ளார்.
ஜ.எம்.எப் இன் உடன்படிக்கை
ஜ.எம்.எப் இன் உடன்படிக்கையுடன் செயற்படுகின்ற நீங்கள் எவ்வாறு உங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தப் போகின்றீர்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையை முன்னெடுக்கப்போகின்றீர்களா அல்லது உங்கள் கொள்கையுடன் செயற்படபோகின்றீர்களா அரசாங்கம் இந்த சபைக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியில் 159 சிறந்த பேச்சாளர்கள் உள்ளனர்.
ஜனாதிபதியும் தேர்தல் மேடைகளில் சிறந்த பேச்சாளராக காணப்பட்டிருந்தார். ஆனால் மக்கள் சிறந்த செயல் வீரர்களையே எதிர்பார்க்கின்றனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
