தயாசிறிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது
ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எதிர்நோக்கிய விபத்து தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் தயாசிறி ஜயசேகர விபத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு புனித பிரிட்ஜெட் கான்வன்ட்டுக்கு அருகாமையில் உடற் பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளொன்று தயாசிறி பயணித்த சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தயாசிறியின் தலை மற்றும் கைகளுக்கு சிறு காயம் ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்து தொடர்பிலான இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும், சீ.சீ.ரி.வி கமராவில் விபத்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ராஜாங்க அமைச்சர் ஒருவர் எதிர்நோக்கிய விபத்து குறித்து ஏன் பொலிஸார் விசாரணை நடாத்தவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, விசாரணை நடாத்தப்படுகின்றதா இல்லையா என்பது தமக்கு தெரியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.