யாழ்ப்பாணம் கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!

Sri Lanka Police Jaffna Murder
By Erimalai Nov 01, 2024 06:00 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna)  - வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்கோவளம், வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் (30.10.2024)  கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் 54 வயதுடைய அவரது மனைவி மேரி ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டு வளவுக்குள் சிக்கிய மர்மம் - அதிரடி படையினர் சுற்றிவளைப்பு

வீட்டு வளவுக்குள் சிக்கிய மர்மம் - அதிரடி படையினர் சுற்றிவளைப்பு

மூன்று சந்தேகநபர்கள்

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நேற்று முன்தினம் இரவும், மற்றொரு சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெறுவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..! | Double Murder Incident Point Pedro

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025 ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மூன்று சந்தேகநபர்களும் இன்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும் , மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையிலான அணிகளும் தீவிரமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவரது உடலங்கள் நேற்று முன்தினம் (30) மீட்கப்பட்டன.

குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் மூவரை பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

 பல குழுக்கள் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவியான 54 வயதுடைய சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..! | Double Murder Incident Point Pedro

அவர்களின் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

அச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பசிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பருத்தித்துறை பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் என பல குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மூவரிடம் தொடர் வாக்குமூலம்

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..! | Double Murder Incident Point Pedro

இவர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28.10.2018 அன்று இடம் பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவரது மனைவியின் தாயாரையம் கொலை செய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரை யாரும் உத்தியோக பூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

அனுபவமின்றி செயற்படும் அரசாங்கம்: சரித ஹேரத் கடும் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US