ஊடகங்களை தடை செய்ய நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்
இலங்கையில் ஊடகங்களை தடை செய்வதற்கு நினைத்துப் பார்க்க கூட வேண்டாம் என எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இன்றைய சமூக ஊடக பரப்பில் செயல்படும் சில ஊடகவியலாளர்கள் கடுமையான விமர்சனங்களை செய்வதாகவும் ஊடக நெறிமுறைகளை பின்பற்றாத ஊடகவியலாளர்களை கூட தடை செய்ய வேண்டுமென தாம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் ஓர் தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதானியாகவும் ஊடகவியலாளராகவும் செயல்பட்ட காலத்தில் குண்டு தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.
எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஊடக நிறுவனம் ஒன்று தடை செய்யப்பட வேண்டும் எனவோ முடக்கப்பட வேண்டும் எனவோ கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை புகழ்ந்து பாராட்டும் ஊடகங்களை மட்டும் வைத்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் ஊடகங்களை தடை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.