பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம்- வன்னியசிங்கம் பிரபாகரன் (video)
ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(13.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு மாகாணத்தின் ஆளுநர் பதவி என்பது ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பதவிக்கு சமனானது.
நிர்வாக முறைகேடுகள்
ஆளுநர்களை நியமிப்பது மாற்றுவது ஜனாதிபதியின் அதிகாரமாக காணப்படுகின்ற நிலையில் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களை ஜனாதிபதி ஆளுநர்களாக நியமிக்க வேண்டும்.
வடக்கில் ஆளுநர் மாற்றம் இடம்பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கடந்த காலங்களில் நிர்வாக முறைகேடுகளில் சிக்கிய ஒருவர் ஆளுநராக வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த நபர் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற தேர்தலை தடுப்பதற்காக திடீர் பதவி விலகலை செய்து தேர்தலை பிற்போடுவதற்கு பிரதான காரணமாக அமைந்தவர்.
மதிப்பளிக்காத ஆளுநர்கள்
மக்களின் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தும் தேர்தலுக்கு மதிப்பளிக்காமல் சுகபோகங்களுக்காக விலைபோகிறவர்கள் எவ்வாறு மக்கள் பணி செய்வார்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான தேவைகள் நிர்வாக ரீதியான உதவிகளை சலுகைகளுக்கு விலைபோகாத ஆளுநரால் மட்டுமே செய்யமுடியும்.
ஆகவே ஆளுநர்களை மாற்றும் போது மக்களுக்காக சேவை செய்யக்கூடிய ஊழல் முறைகேடுகளுடன் தொடர்பு அற்றவர்களை ஆளுநராக மாகாணங்களுக்கு நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
