எதிரணிகளை முடக்கிவிட்டு தேர்தல் வேண்டாம் : சஜித் அணியினர் வலியுறுத்து
எதிரணிகளை நாடாளுமன்றத்துக்குள் முடக்கி வைத்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பாதீட்டு கூட்டத் தொடர், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த பின்னர் பொருத்தமானதொரு நாளில் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவும் இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் - அமெரிக்காவில் முறைப்பாடு
அரச சேவையாளர்களுக்கு நெருக்கடி
மார்ச் 21ஆம் திகதி வரை வரவு- செலவுத் திட்ட கூட்டத் தொடர் நடைபெறும். பாதீட்டு விவாதம் என்பது எதிரணிகளுக்கு முக்கியம். எனவே, எம்மை நாடாளுமன்றத்துக்குள் வைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படக்கூடாது.
பொருத்தமானதொரு சூழ்நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாதக் கணக்கத்தில் தேர்தலைப் பிற்போடுமாறு கோரவில்லை.
ஜி.சீ.ஈ . சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டு நடைபெறவுள்ளது. சுமார் 10 நாட்கள் வரை விடுமுறை காலப்பகுதி உள்ளது.
எனவே, அரச சேவையாளர்களுக்கு நெருக்கடி நிலை உருவாகும்.தேர்தல் திகதி தொடர்பில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே செலுத்திய கட்டுப்பணமும் மீளச் செலுத்தப்படவில்லை. எமக்கு நிதி நெருக்கடி உள்ளது. அதனை மீளச் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
