சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம்: டக்ளஸ் பணிப்புரை (Video)
யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம்
நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22.03.2023)இடம்பெற்ற பிரதேச செயல்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமுர்த்திப் பயனாளிகள்
சமுர்த்திப் பயனாளிகளிடம் கொடி வாரம் மது ஒழிப்பு வாரம் என ஒவ்வொரு வருடமும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுவதாக முறைபாடுகள் கிடைத்துள்ளன. சமுர்த்தி பயனாளிகளிடம் குறித்த விடயங்களுக்காக நிதி சேகரிக்கும் போது அதனை அவர்கள் வழங்காவிட்டால் சமுர்த்தி நிறுத்தப்படும் என்ற மன உணர்வு அவர்களுக்கு ஏற்படக்கூடும்.
இல்லாவிட்டால் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் நிதி தராவிட்டால் சமுர்த்தி நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தல்களை விடுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. மேலும் யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையில் சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
ஆகவே இனி வரும் காலங்களில் சமுர்த்தி பயனாளிகளிடம் சமூக மட்ட நிகழ்வுகளுக்கான நிதிகளை சேகரிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பணி இடமாற்றங்கள்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் பணி இடமாற்றங்கள் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ள நிலையில் அதனை யாரும் மீறக்கூடாது. யாழ் மாவட்டத்தில் பத்து அதற்கு மேற்பட்ட வருடங்கள் இடமாற்றங்கள் வழங்கப்படாத சமுர்த்தி உத்தியோதர்கள் ஒரே பிரதேசத்தில் கடமையாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அது மட்டும் அல்ல அது சில உத்தியோகத்தர்கள் அருகருகே உள்ள பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் உரியவர்கள் தலையீடு செய்து சரியான இடமாற்றங்களை ஒரு மாத காலத்துக்குள் செய்ய வேண்டும்.
மேலும் சில உத்தியோகத்தர்களின் சேவை அப்பிரதேசத்திற்கு அவசியம் என கருதினால் மாவட்ட செயலகத்துடன் கலந்துரையாடி தீர்வுகளை எட்ட முடியும்.
பதவி உயர்வு மற்றும் சம்பளப் பிரச்சனை
சில சமுர்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு சம்பளப் பிரச்சனை தொடர்பில் என்னிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் சமுர்த்திப் பணிப்பாளர் நாயகத்துடன் பேசி இருக்கிறேன்.
அவர் நான் எடுக்கும் முடிவுகளின் பிரகாரம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கின்ற நிலையில் அதனை நான் விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஆகவே சமுர்த்தி உத்தியோத்தர்கள் கிராமத்தில் உங்கள் சேவையை ஆற்றுவதோடு சமுர்த்தி பயனாளிகளை வீட்டு விவசாயத்தில் ஊக்குவிப்பதற்கு சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்
குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) பிரதேச செயலாளர் யாழ் மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் உத்தியோத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
