சர்வதேச நாணய நிதியத்தின் உந்துதலில் முழுவதும் இணைந்திருக்க கூடாது! சரித ஹேரத் வலியுறுத்து

Sivaa Mayuri
in பொருளாதாரம்Report this article
தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயன்முறையைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உந்துதல் கட்டமைப்புடன் இலங்கை முற்றிலும் இணைந்திருக்க கூடாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டின் பொருளாதாரம் குறித்து அதிக விசேட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் சிறிய திட்டங்களை மாத்திரமே நடைமுறைப்படுத்துகின்றனர்.
இலங்கை பெற்ற கடனை செலுத்தவில்லை, இதன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கையிருப்பு போதுமானதாக உள்ளது.
கடன் மறுசீரமைப்பு
அதேவேளை, கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் குறைபாடுள்ளதுடன் அடுத்த கட்டம் என்னவென்று கூட தெரியவில்லை.
இந்நிலையில், இதற்காக அரசாங்கம் என்ன செய்ய முயல்கிறது என்பதனையும் நாட்டுக்கு தெரிவிக்கவில்லை.
அதேநேரம், நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளும் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், சிறிய திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மேலும், 52 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் கண்மூடித்தனமாக அழைப்பு விடுத்து வருகின்றது.
அது மாத்திரமன்றி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்றவையும் குறித்த 52 - அரச நிறுவனங்களுக்குள் அடங்கும்.
அதேவேளை, 2024ஆம் ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கைக்கு புதிய ஜனாதிபதியை தயார் செய்ய வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர் சர்ச்சைக்குள் சிக்கும் அமைச்சர் ஜீவன்! பொலிஸ் மா அதிபரின் உத்தரவை இரத்துச் செய்த அமைச்சர் டிரான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
