தொடர் சர்ச்சைக்குள் சிக்கும் அமைச்சர் ஜீவன்! பொலிஸ் மா அதிபரின் உத்தரவை இரத்துச் செய்த அமைச்சர் டிரான்
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரிகளின் கைத்துப்பாக்கிகளைப் பறிக்க உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபரின் உத்தரவை அமைச்சர் டிரான் அலஸ் ரத்துச் செய்துள்ளார்.
நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினருடன் முறுகல் நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரினதும் கைத்துப்பாக்கிகள் மூன்றையும் உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கடந்த முதலாம் திகதி மாலை ஆறுமணியளவில் உத்தரவிட்டுள்ளார்.
டிரான் அலஸின் உத்தரவு
எனினும் அன்றைய தினம் இரவு பதினொரு மணியளவில் தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் குறித்த உத்தரவை ரத்துச் செய்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கைத்துப்பாக்கிகளை மீளவும் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் தலவாக்கலைப் பொலிஸாரின் தொலைபேசி அழைப்புக்கிணங்க, அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கைத்துப்பாக்கிகளை மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |