ஊடகங்களை அடக்கக் கூடாது - எஸ்.எம்.மரிக்கார்
இலங்கையில் ஊடகங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நான்காவது அரசாங்கமாக ஊடகங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே ஊடகங்கள் மீதான தணிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் என்பது இலக்கங்களை காண்பிப்பது அல்ல எனவும் அவை இலக்குகளை அடைவது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் மூன்று அமைச்சுகளின் உட்கட்டுமான வசதிகள் தொடர்பிலேயே பேசப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது சீரிய ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த இலக்குகள் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இயங்குவதனை தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டின் நான்காவது அரசாங்கமாக கருதப்படும் ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்க வேண்டாம் எனவும் ஊடகங்கள் மீதான தணிக்கையின் மூலம் எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.