அனுராதபுரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்ற விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
அனுராதபுரம் - கம்பிரிகஸ்வெவவில் வசிக்கும் ஜெ.எம். சாதிக் என்பவருடைய மகன் ஆகில் அஹமத் என்பவருக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கம்பிரிகஸ்வெவ ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலிஸீமியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள 1 கோடியே 50 இலட்சம் ரூபா (15,000,000) பணம் தேவைப்படுகின்றது.
இந்த சத்திர சிகிச்சை இந்தியாவை சேர்ந்த வைத்தியர் நடராஜ் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் இந்த பாரிய தொகையை சிறுவனின் தந்தையால் சுமக்க முடியாததன் காரணமாக முடிந்த உதவிகளை வழங்குமாறு கம்பிரிகஸ்வெவ ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சிறுவனின் தந்தையினுடைய கணக்கிலக்கம் மற்றும் ஏனைய விபரங்கள் பின்வருமாறு,
ஜெ.எம். சாதிக்
வர்த்தக வங்கி (Commercial bank)
கணக்கிலக்கம் - 8021513882
அனுராதபுரம் கிளை (Anuradhapura Branch)
தொலைபேசி இலக்கம் / வட்ஸ்அப் - 0776288378
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |