தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவளிக்க நன்கொடை நிகழ்ச்சி திட்டம்
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கிய தெஹிவளை விலங்கியல் பூங்கா ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
1936 இல் நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் தற்போது சுமார் 4,000 விலங்குகள் உள்ளன, இந்நிலையில் அங்கிருக்க கூடிய விலங்குகளுக்கு உணவளிக்க சுமார் ரூ. 45 மில்லியன் செலவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
சத்வ சாவியா

அதன்படி, நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு 86 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘சத்வ சாவியா’ என்ற புதிய வளர்ப்பு வேலைத்திட்டமும் நன்கொடை திட்டமும் இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் எந்தவொரு பிரஜையும் ஒரு விலங்கு அல்லது விலங்குகளின் குழுவின் பொறுப்பை ஏற்க முடியும், மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளுக்கு போதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் வீழ்ச்சியால் நிலைமை மோசமடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராட்டமே சிறந்த வழி (PHOTOS) |




யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam