டொனால்ட் ட்ரம்ப்பின் 5 இலக்குகள்: தோல்வி கண்ட அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 இலக்குகளை நோக்கமாகக் கொண்டே தனது புதிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
சிறந்த வர்த்தக ஒப்பந்தங்கள், அதிக தொழிற்சாலை வேலை வாய்ப்புகள், சீனாவிற்கு எதிராக வலுவான நடவடிக்கை, அதிக அரசாங்க வருவாய் மற்றும் வாழ்க்கை செலவை குறைத்தல் போன்றவையே அந்த 5 இலக்குகள் ஆகும்.
எனினும், அவர் சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரிக் கொள்கையின் இடைநிறுத்தம், மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
மூலப்பொருள் பற்றாக்குறை
தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற சில நாடுகள் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், டிரம்ப் உறுதியளித்த வலுவான இலக்குகளை அடைவாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அமெரிக்க தொழில்துறையை ஊக்குவிப்பதில் புதிய வரிக் கொள்கை பங்களிக்கும் என ட்ரம்ப் நம்பினார். ஆனால், பல தொழில்துறைகள் புதிய வரிக் கொள்கையின் பின்னர் ஏற்பட்ட மூலப்பொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ட்ரம்பின் மற்றுமொரு நோக்கம் சீனாவிற்கு எதிராக வலுவான நடவடிக்கை ஆகும். எனினும், சீனா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாட்டுடன் வர்த்தகப் போரை தொடங்குவது அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கலாம்.
இதேவேளை, வரிக் கொள்கை மூலம் வருவாயை உயர்த்துவது மற்றொரு இலக்காக இருந்தது. 10% வரிவிதிப்பு 10 ஆண்டுகளில் ட்ரில்லியன் கணக்கான டொலர்களைக் கொண்டுவரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெகுதூரத்தில் இலக்குகள்
ஆனால், அமெரிக்க மக்கள் அதிக வரி காரணமாக இறக்குமதிப் பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், வரியிலிருந்து வரும் வருவாய் குறையும்.
அத்துடன், வாழ்க்கை செலவை மட்டுப்படுத்துவதற்கும் ட்ரம்ப் விரும்பினார். ஆனால், புதிய வரிகள் இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது மற்றும் வருவாயை உயர்த்துவது போன்ற சில இலக்குகளில் ட்ரம்ப் முன்னேற்றத்தை கண்டிருக்கலாம்.
எனினும், தொழிற்சாலை வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை குறைத்தல் போன்ற இலக்குகளை அடைவது இன்னும் வெகுதூரத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ந்து வெடித்தால் காதுகளிலும் கண்களிலும் இரத்தம் வடியும்! ஈரானை அச்சப்படுத்தும் அமெரிக்காவின் அதிசயக் குண்டு!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |