முதல்முறையாக இஸ்ரேல் சென்ற டொனால்ட் ட்ரம்ப்! கிடைக்கவுள்ள உயரிய விருது
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு
ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் ட்ரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்ற சென்ற நிலையில், அப்போது இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று, உலகிற்கு அதிக ட்ரம்ப்கள் தேவை" என உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
BREAKING 🚨 President Trump walks off Air Force One for his impossible HISTORIC Peace Agreement
— MAGA Voice (@MAGAVoice) October 13, 2025
I have absolute chills right now
Trump is the MAGA King pic.twitter.com/nFxKZjyIfh
டிரம்ப் ஜனாதிபதிக்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் (Israeli Presidential Medal of Honor) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான அமைதி அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது எகிப்தில் நடைபெறவுள்ள நிலையில் எகிப்து செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



