வளங்களை விற்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் : ஏ.எல். சுகத் பிரசாந்த
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ.எல்.சுகத் பிரசாந்த தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று (24)மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு 1948ல் சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை: சண்முகம் குகதாசன் எம். பி
அரசியல் கட்சிகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதற்கு காரணம் கடந்த கால அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க இந்த ஆட்சியினுடைய தலைவராக இருந்தார். அவரை நாங்கள் பார்த்தோம் இந்த திருகோணாமலைக்கு என்ன நடந்தது நாட்டைப் பற்றி யோசிக்க முன்னர் எங்களுடைய திருகோணமலையை பற்றி யோசிக்க வேண்டும்.
இந்த நாட்டின் முக்கியமான ஒரு இடம்தான் திருகோணாமலை பொருளாதாரம் ஏனைய விடயங்களுக்கும் முக்கியமாக இருக்கிறது.
ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட ஆளுநர் அவருடைய நோக்கங்களை செய்வதற்காக அனுப்பி உள்ளார் அவர் நினைக்கிற மாதிரி இந்த திருகோணமலையில் உள்ள காணிகள், வளங்கள் அனைத்தையும் வெளிநாட்டுக்கு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இது எங்கள் கண்முன்னால் நடக்கிறது இதை யாரும் கேட்பார் இல்லை நாங்கள் மாத்திரம் தான் இதனை எடுத்துச் சொன்னோம் . இதனைக் காப்பாற்றினோம் மக்களுக்காக வேண்டி நாங்கள் செய்தோம்.
இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதி கட்சிகள் எதுவும் செய்யவில்லை சிங்கள கட்சி முஸ்லிம் கட்சி தமிழ் கட்சி யாரும் பேசவில்லை. அனுகுமார திசாநாயக்காவும் இவை பற்றி பேசவில்லை ஆனால் சஜித் பிரேமதாச மட்டும் கதைத்துள்ளார்.
மக்களிடம் இருந்துதான் காசு வாங்கி இந்த அரசாங்கம் நாட்டை நடாத்தி கொண்டிருக்கின்றார்கள்.
இந்த முறை நீங்கள் சஜித் பிரேமதாசாவை நாட்டின் தலைவராக உருவாக்குவதற்கு ஜனாதிபதிதேர்தலில் ஆக்குவதற்கு வாக்குகளை அளியுங்கள் என்றார்.