சிறுவர்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: பிரசாந்தன் கண்டனம்
சிறுவர்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இலங்கையில் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது.
மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் உள்ள தரவுகளை இந்த பூரண விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் இறைமையினை பாதுகாக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (23.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
“இன்று சர்வதேசத்தின் பேசும் பொருளாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு காணப்படுகின்ற இவ்வேளையில் உண்மையாகவே புகலிட கோரிக்கையாளர்களின் தமது இருப்பை தக்க வைப்பதற்காக முனைகின்ற போலிக்கதைகளை அனைவரும் நன்கு அறிவார்கள். அங்குள்ள நீதிமன்றங்களின் வழக்குகளை தீர்மானிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இது சம்பந்தமான பல தரவுகளை வழங்கி வருகின்ற வேளையில் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் உரிமை கூறியுள்ளனர்.

இது கடந்துள்ள நிலையிலும் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் அவை இழுத்தடிப்பு செய்யப்பட்டதா?
கிழக்கு மாகாணத்தில் இந்த பயங்கரவாதிகளின் அச்ச சூழ்நிலை காணப்படுகின்ற வேளையிலும் இந்த குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக புகலிடக்கோரிக்கைகளை கூறுகின்ற அசாத் மௌலானா போன்ற பல தரப்பினர் இந்த விசாரணையை திசை திருப்புவதற்காக இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.
முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை திசை திருப்பதற்காக இது சம்பந்தமான பல கருத்துக்களை மிகத் தீவிரமாக வெளியிட்டு வருகின்றனர்.
இதில் எமது கட்சிக்கு சந்தேகம் உள்ளது. எமது கட்சியானது உள்ளக விசாரணை மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு முகம் கொடுக்க எப்பவுமே தயாராக இருக்கின்றோம்.உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சிறுவர்களின் மரணத்தில் வைத்து அரசியல் செய்வதை நாம் வன்மையாக
கண்டிப்பதோடு, இலங்கையில் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது.
நாடாளுமன்றத்திற்கும், வெளியிலும் மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் உள்ள தரவுகளை பூரண விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் இறமையினை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |