வெற்று சபையை தமிழ் மக்களுக்கு திணிக்க வேண்டாம் : அனந்தி சசிதரன் விசனம் (video)
13ஆம் திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லை, காணி அதிகாரம் இல்லை, வடக்கு - கிழக்கு இணைப்பில்லை என்ற நிலையில் ஒரு வெற்று சபையை தமிழ் மக்களுக்கு திணிக்க வேண்டாம் என வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் விசனம் தெரிவித்துள்ளார்.
யாழ். அலுவலகத்தில் இன்று (22.07.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி தமிழர் தரப்பை கேட்காமலேயே 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
எல்லா விடயங்களிலும் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்தும் போது ஏன் இருக்கின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
சுகாதார அமைச்சரின் பொறுப்பற்ற நிலை
இது இவ்வாறு இருக்க அண்மை காலங்களில் தரமற்ற மருத்து காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப் பட்டிருக்கின்றன. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதும் மக்களின் உயிரை துச்சமாக கருதும் வகையில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்களும் மிகவும் வருந்தத்தக்கது.
அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடும் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது கிடையாது.
பண பலம் அற்ற சாதாரண மக்கள் இலவச மருத்துவ வசதியை மாத்திரமே பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் சுகாதார அமைச்சரின் பொறுப்பற்ற நிலை குறித்து மக்கள் மத்தியில் கடும் விசனம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
