பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த போது உயிரிழந்த பெண்! கொழும்பில் நீதிமன்றம் முன்பாக போராட்டம் (Video)
கொழும்பு - 12 புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக தற்போது (24.05.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது வெலிக்கடை பொலிஸில் கொல்லப்பட்ட வீட்டுப் பணிப்பெண் ஆர்.ராஜகுமாரிக்கு நீதி கோரிய போராட்டக்காரர்கள், அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்
கொழும்பில் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
வீடொன்றில் பணியாற்றிய நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்த போது உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
