102 வீதத்தை எட்டியுள்ள உள்நாட்டு வருமான இலக்கு
உள்நாட்டு வருமான இலக்கு 102 வீதத்தை எட்டியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் அதன் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் 102 வீதத்தை அதிகமாக வசூலித்ததாக, நாடாளுமன்றக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமானம்
செப்டெம்பர் 30ஆம் திகதி நிலவரப்படி, எதிர்பார்க்கப்பட்ட ரூ.1.61 டிரில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.1.64 டிரில்லியன் வருமானம் எட்டப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வருமான செயல்திறன், தற்போதைய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி நிர்வாகத்தில் உள்ள சவால்களை, குறித்த நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

சீர்திருத்த முன்மொழிவு
இதனையடுத்து, நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்த முன்மொழிவுகளுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |