உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்கீழ், திறைசேரி பற்றுச்சீட்டுகள் மற்றும் பத்திரங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு செலுத்தப்படும் வட்டியை 9வீதமாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த செயற்பாட்டின் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களையே உயர்நீதிமன்றம் நேற்று(30.10.2024)தள்ளுபடி செய்துள்ளது.
சட்டமா அதிபர்
சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam