நள்ளிரவு தாண்டியும் தீவிரமடையும் போராட்டம்! ஜனாதிபதி வீட்டு வளாகத்தின் கள நிலவரம் (VIDEO)
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் இன்று ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றிரவு நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை பல மணி நேரமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டம் காரணமாக பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு பிரிவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,தொடர்ந்தும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோரின் பங்குப்பற்றுதலுடன் போராட்டம் தொடர்கின்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.















அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
