இலங்கைக்கு கிடைத்த அந்நிய செலவாணி தொடர்பில் வெளியான தகவல்
2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலவாணியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 1.6 பில்லியன் டொலராக அந்நிய செலவணியாக குறைவடைந்துள்ள நிலையில் அது 51.6 சதவீத வீழ்ச்சியாக கணக்கிடப்பட்டுள்ளது.
அந்நிய செலவாணி வீழ்ச்சி
கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களால் அனுப்பப்பட்ட அந்நிய செலவாணி 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது 2021 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 478.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து. இது 42.6 சதவீத வீழ்ச்சியாகும்.
வெளிநாடு வாழ் இலங்கையர்களினால் பணம் அனுப்பும் நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனில் டொலரிலிருந்து மே மாதத்தில் 304 மில்லியனாக டொலர்களாக அதிகரித்தது. ஆனால் ஜுன் மாதத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புலம்பெயர் இலங்கையர்களின் தீர்மானம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பணம் அனுப்புவதை குறைத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர், பெருந்தொகை டொலர்களை நாட்டுக்காக அனுப்பியுள்ளதாக பல புலம்பெயர் இலங்கையர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
