இலங்கையில் டொலருக்காக செலவிடப்படும் 310 ரூபா! அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்
அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதுதான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருக்கிறது. இலவசமாக கொடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து அறிவிடவேண்டியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு நேற்று (12) தப்ரபேன் எண்டர்டைன்மண்டில் நடைபெற்றது.
தற்போது இலங்கையில் ஒரு டொலருக்காக சுமார் 310 ரூபா செலவிடப்படுகிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அச்சிடப்பட்ட பணம்
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நம் நாட்டில் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தோம். வருமானம் இல்லாத போது மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்க பணம் அச்சிடப்பட்டது.
இதனால், நாம் பெற்ற வெளிநாட்டுக் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இறுதியாக, கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தோம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, மக்களிடம் பணம் செலுத்தும் திறன் ஏற்படும்.
பணம் செலுத்தும் திறன் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.
தற்போது இலங்கையில் ஒரு டொலருக்காக சுமார் 310 ரூபா செலவிடப்படுகிறது. நாங்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கிறோம். அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தற்போது நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
எனவே, நான் இலவச டேட்டா வழங்குவதாக இங்கு உறுதியளித்தால், அது அனைவரையும் தவறாக வழிநடத்துவதாகவே அமையும். எனவே, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, மக்களின் பணம் செலுத்தும் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை
செயல்படுத்துவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். சிலவற்றை இலவசமாகக் கொடுத்தால், எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் உருவாகும்.
நாடு மீண்டும் கடந்த காலத்தின் இருண்ட யுகத்திற்குள் சென்று விடாமல் அவதானமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசு கொடுக்கும் பணத்தினால் நேர்ந்த விபரீதம்! வேலையில்லாமல் வீட்டிலிருந்து சாப்பிட பழகிய இலங்கையர்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |