டொலர் தட்டுப்பாடு:துறைமுகத்தில் சிக்கியுள்ள 1500 கொள்கலன்கள்
டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய பொருட்களை ஏற்றிய சுமார் ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகள் துறைமுகத்தில் சிக்கி இருப்பதாக அத்தியவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவற்றில் சுமார் 50 கொள்கலன் பெட்டிகள் மட்டுமே வர்த்தகர்களால் கட்டணங்களை செலுத்தி வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன் பெட்டிகளில் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய உணவு பொருட்கள் இருக்கின்றன.
தினமும் அதிகளவிலான கொள்கலன் பெட்டிகளை விடுத்துக்கொள்வதற்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் உட்பட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையை கோரியுள்ளோம்.
தேவையான டொலர்களை துரிதமாக வழங்கி கொள்கலன் பெட்டிகளை விடுவிக்காது போனால், எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam