இலங்கையில் வர்த்தக வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(02.05.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 311.59 ரூபா மற்றும் 330.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 310.05 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 314 ரூபா மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri