வலுவடையும் ரூபாவின் பெறுமதி! மக்களுக்காக எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (14.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடரும் சோதனை நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில், பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை
எனினும், பிரதேச ரீதியாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை, இதற்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையே பிரதான காரணமாகும்.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |