டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவாகியுள்ள அதிகரிப்பு! மத்திய வங்கியின் தகவல்
ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி
இது கடந்த காலங்களில் வீழ்ச்சி போக்கை பதிவு செய்திருந்தது. மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
எனினும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான பெறுமதியாகவே உள்ளது.
கடந்த வாரத்தில் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபா 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்டிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகமதிப்பு கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் பொருளாதாரத்தின் நடத்தை குறித்த மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாய் 9.4 சதவீதமும், யூரோ நாணய அலகுக்கு எதிராக 7 சதவீதமும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் பெறுமதி
இதேவேளை இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கூறுகையில், இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.
வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |