2023 இற்கு பின்னர் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 331.15 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (15.05.2026) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உயர்ந்த மதிப்பு பதிவு
இது கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதிக்கு பிறகு பதிவான மிக உயர்ந்த மதிப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அன்று, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 331.30 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் கடந்த காலத்தில் ஒப்பீட்டளவில் நிலையாக இருந்த டொலரின் மதிப்பானது மீண்டும் 331 ரூபா என்ற எல்லையைத் தாண்டியுள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323 ரூபாவாகவம், கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 309.2836 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.1800 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri