இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! வெளியான தகவல்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 320.27 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 308.70 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை விற்பனை விலை 343 ரூபாவில் இருந்து 330 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 310 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை விலை 325 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய தினம் 314 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 311 ரூபாவாக குறைந்துள்ளது.

அத்துடன் கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய தினம் 336 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 330 ரூபாவாக குறைந்துள்ளது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri