இலங்கையிலுள்ள சில வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் பதிவாகும் சடுதியான மாற்றம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 332.81 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 320.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை விற்பனை விலை 356 ரூபாவில் இருந்து 343 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 315 ரூபாவாக காணப்படுவதுடன், விற்பனை விலை 330 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 331.48 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 314 ரூபாவாக குறைந்துள்ளது.

அத்துடன் கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை 350 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 336 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam