இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோக பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே இன்று 286.66 ரூபாவாகவும், 295.67 ரூபாவாகவும் உள்ளது.
ரூபாவின் பெறுமதி
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் (Dollar) ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.51 ரூபாவாகவும், 295.51 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357.94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 372.20 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.4ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.05 ஆகவும் பதிவாகியுள்ளது.
எனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |