வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.45 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் 293.23 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்று 301.15 ரூபாவாக காணப்பட்டதோடு, இன்று 301.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.24 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 376.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.14 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 315.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.50 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 209.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.61 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 189.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வர்த்தக வங்கிகளில் நிலவரம்
இந்நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (31) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 292.80 முதல் ரூ. 293.75 இற்கும் விற்பனை விலை ரூ. 302.80 முதல் ரூ. 303.75 பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 291.74 முதல் ரூ. 292.38 இற்கும் ரூ.302.21 முதல் ரூ.302.87 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291.18 முதல் ரூ. 291.96 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 300.75 முதல் ரூ. 301.50 என்றவாறாகக் காணப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri