வீழ்ச்சியடையும் டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(06.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 322.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 386.11 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 371.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam