டொலருக்கு எதிரான ரூபாவின் இன்றைய பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(30.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.14 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.50 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 311.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 374.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 18 மணி நேரம் முன்
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க.. Cineulagam