வேகமாக அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (17.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 380.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 12 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri