அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிக்கு இடையில் வித்தியாசம்
கடந்த 10ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(15.04.2024) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி உயர்ந்துள்ளதுடன், விற்பனை பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (15.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.25 ரூபாவாகவும், கொள்வனவு விலை 293.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 221.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 311.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 379.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 364.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan