300 ரூபாவை அண்மித்த அமெரிக்க டொலரின் பெறுமதி : பதிவாகியுள்ள கடும் வீழ்ச்சி
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(01.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.23 ரூபாவாகவும், கொள்வனவு விலை 304.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 233.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 223.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 341.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 327.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 398.66 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 383.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாவுக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 304 ரூபா வரையில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri